சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், சிங்கை அரசின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானியுமான ஸ்ரீ ராம் ராமகிருஷ்ணா, சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முழுநேரப் பணியில் சேர்ந்துள்ளார்.
அவர் செப்டம்பர் மாதம் சிங்குவா பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறையில் சேர்ந்தார், ஆனால் பல்கலைக்கழகம் இந்த நியமனத்தை இந்த வாரம்தான் அறிவித்தது. எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ சீனாவால் “எலக்ட்ரோஸ்பின்னிங்கின் தந்தை” என்று வர்ணிக்கப்பட்ட இந்த சிங்கப்பூரர், சிங்குவா சிறப்புப் பேராசிரியர் (பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த பேராசிரியர் பட்டம்) மற்றும் அதன் ஐவேரபிள்ஸ் மையத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்குவா பல்கலைக்கழகத் தலைவர் லி லுமிங், ராமகிருஷ்ணாவை நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத் துறைகளில் ஒரு உலகத் தலைவர் என்று வர்ணித்து, அவரைப் பல்கலைக்கழகத்திற்கு வரவேற்றார். சிங்குவாவின் கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை நன்கு அறிந்திருப்ப தாகவும், புதுமையான ஆராய்ச்சிகளை நடத்த தனது அனுபவத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் ராமகிருஷ்ணா கூறினார்



