அப்துல்லா ஹுகும் ரயில் நிலையத்தில் ஒரு பயணி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் காரணமாக, யுனிவர்சிட்டி, கெரிஞ்சி மற்றும் அப்துல்லா ஹுகும் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் நேற்று மாலை 6.09 மணிக்கு தற்காலிகமாகத் தடைபட்டன.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பாதுகாப்பு நடவடிக்கையாக நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டதாக ரேபிட் ரெயில் எஸ்.டி.என். பி.எச்.டி (ரேபிட் ரெயில்) ஒரு அறிக்கை யில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் பயணிப்பதற்காக, இலவச ஷட்டில் பேருந்துகள் போன்ற மாற்றுப் போக்கு வரத்து சேவைகள் செயல்படுத்தப் பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாக ரேபிட் ரெயில் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற் கும் தாமதத்திற்கும் அனைத்துப் பயணி களிடமும் அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியதுடன், ரேபிட் கே.எல் சமூக ஊடகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிலையங்களில் வெளி யாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் நிலவரங்களைத் தெரிந்து கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியது.



