பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தாங் பாடாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவோடு ஏப்ரல் 9 ஆம் தேதி 2026இல் சிறுகதைப் பயிலரங்கம் நடைபெறும்
எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சிவாலெனின் தலைமையேற்கும் இப்பயிலரங்கிற்கு சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் சிறப்பு வருகை அளித்து நிகழ்ச்சியை நிறைவு செய்து வைப்பார்.
பத்தாங் பாடாங் மாவட்டத் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் திரு.கா.தியாரன் இப்பயிலரங்கில் அதன் நோக்கத்தை எடுத்துரைக்கும் வேளை யில் சங்கத்தின் துணைத்தலைவர் மேனாள் தலைமையாசிரியர் திரு.ச.முனியாண்டி வரவேற்புரையும் ஆற்றுவார்.
இப்பயிலரங்கினை மேனாள் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் இலக்கியக் காவலர் பி.எம்.மூர்த்தி வழிநடத்துவார்.அண்மையில் நடைபெற்ற காற்றிலாடும் இறகின் திசை நூல் வெளியீடு நிகழ்ச்சியில் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இம்மாதிரியான பயிலரங்கை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடத்திட சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்த நிலையில்,அதன் முதல் பயிலரங்கமாய் இந்தப் பயிலரங்கம் அமைந்துள்ளது. பேரா மாநிலத்திலுள்ள பிற மாவட்டங்களிலுள்ள தலைமையாசிரியர் கழகம்,தமிழ்ப்பள்ளி,இடைநிலைப்பள்ளிகளும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை அணுகலாம்.




