Vimarsagan Media

Home » Malaysia » வானம் பொழியும் பூமி குளிரும் மெட் மலேசியா கணிக்கிறது

வானம் பொழியும் பூமி குளிரும் மெட் மலேசியா கணிக்கிறது

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எட்டு மாநிலங்களுக்கும் லாபுவான் கூட்டரசு பகுதிக்கும் கடுமையான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நள்ளிரவு 1 மணி வரை செல்லுபடியாகும் இந்த எச்சரிக்கை, இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று கணித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பினாங்கு மற்றும் கெடாவின் பல மாவட்டங்கள், அதாவது யான், பெண்டாங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பஹாரு ஆகியவை அடங்கும்.

பேராக்கில், கெரியன், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, ஹுலு பேராக், குவாலா கங்சார் மற்றும் கிந்தாஆகிய இடங்களை இந்த எச்சரிக்கை உள்ளடக்கியது.

கிளந்தானின் ஜெலி மற்றும் குவா முசாங் மாவட்டங்களிலும், திரெங்கானுவில் உள்ள டுங்குன் மற்றும் கெமாமன் போன்ற இடங்களிலும் இதே போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப் படுகின்றன

Scroll to Top