இராகவன் கருப்பையா, எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.’மலேசியா இன்று’ (Malaysiaindru.my) போன்ற தமிழ் ஊடகங்களில் அரசியல், சமூகம் மற்றும் மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் சார்ந்த கருத்துக் குவியலை எழுதி வரும் இவர், மலேசியச் சூழலில் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து தைரியமான கருத்துகளைப் பதிவு செய்து வருபவர்.
நாட்டின் மூத்த பத்திரிகையாளரான ராகவன் கருப்பையா நீண்ட காலமாக ஆயுள் காப்புறுதித் துறையிலும் தனது சேவையை வழங்கி வந்துள்ளார். வருகிறார்.
1978ஆம் ஆண்டு முதல் இவரின் ஊடகப் பயணம் தமிழ் மலர் நாளிதழில் தொடங்கி பின் தமிழ் ஓசை தினசரி யிலும் தமது எழுத்துப் பணியைத் தொடங்கினார்.
பிறகு 1985ஆம் ஆண்டில் கிரேட் ஈஸ்டர்ன் ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் ஊழியராக பணியில் அமர்ந்த ராகவன் கருப்பையா, 6 ஆண்டுகள் கழித்து காப்புறுதி விற்பனை பிரிவுக்கு மாறி ஒரு முகவராக தடம் பதிக்கத் தொடங்கினார்.
கடுமையான உழைப்பின்வழி தம்மை உயர்த்திக் கொண்ட அவர் ஆறே ஆண்டுக-ளில் அந்நிறுவனத்தின் குழு நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றார்.
இருந்தபோதிலும் பகுதி நேரமாக தமிழ் எழுத்துப் பணியை தொடர்ந்து மேற்-கொண்டு வரும் ராகவன் கருப்பையா, இன்று வரையிலும் சமூக, அரசியல் அலசல் கட்டுரைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார்.
அவருடைய கட்டுரைகள் ‘மலேசியா இன்று’ எனப்படும் ‘மலேசியாகினி’யில பிரசுரமாகி வருகின்றன.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக காப்புறுதித் துறையில் கோலோச்சிவரும் ராகவன் கருப்பையாவுக்கு, அவர் சார்ந்துள்ள ‘கிரேட் ஈஸ்டர்ன்’ ஆயுள் காப்புறுதி. நிறுவனம் ‘நீண்டகால சேவை’க்-கான விருதை வழங்கி கௌரவித்தது.
காப்புறுதி சேவையின்வழி 53 நாடுகளுக்கு பயணித்துள்ள ராகவன் கருப்பையா, இரு பயண நூல்கள் உள்பட 4 புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார்




