தமிழ் சினிமாவில் கவிஞராகவும், நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் அறியப்படும் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா தம்பதிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின் றனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தங்களு டைய குடும்ப வாழ்க்கையையும், குறிப்பாக இரட்டை பெண் குழந்தை களின் அழகான தருணங்களையும் அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு குழந்தைகள் குறித்து மோசமாக கமெண்ட் போட்ட நபருக்கு கன்னிகா சரியான சம்பவம் செய்திருக்கிறார்.
சினேகன் கன்னிகா குழந்தைகள் செய்யும் குறும்புகள், சின்ன சின்ன சேட்டைகளை கன்னிகா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறிவிடுகிறது. இதனால் பலரும் “இன்னும் இப்படிப் பல வீடியோக்கள் போடுங்கள்” என்று கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், “கண்ணே பட்டுடாதே”, “திருஷ்டி சுத்தி போடுங்க” என்று அன்பாக கவலைப்படும் கமெண்ட்களும் அதிகம். சினேகன் கன்னிகா தம்பதி
ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில்தான் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர், அந்த சிறிய குழந்தைகளை குறித்தே மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்துள்ளார். இதை சும்மா விடாமல் கன்னிகா நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.




