Vimarsagan Media

Home » Malaysia » கருஞ்சட்டை இளைஞர் படை:- சர்ச்சை வழிப்பாட்டுத் தலங்கள் கருத்தரங்கு

கருஞ்சட்டை இளைஞர் படை:- சர்ச்சை வழிப்பாட்டுத் தலங்கள் கருத்தரங்கு

கோலாலம்பூர், 4 /4/2025 – கடந்த சனிக்கிழமை கருஞ்சட்டை இளைஞர் படை சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் : சிக்கலும் தீர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அரங்கில் (Kuala Lumpur Chinese Assembly Hall) வெற்றிகரமாக நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள், மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டணர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான லத்திஃபா கோயா, மலேசிய சோசலிசய கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வனும், சமூக ஆர்வலரும் கருஞ்சட்டை இளைஞர் படையின் பிரதிநிதியுமான கௌசல்யாவும் வழக்கறிஞருமான குணசேகரனும் அதில் அடங்குவர்.

இந்தக் கருத்தரங்கில் சிறுபான்மை இனமான இந்தியர்கள் தங்கள் இனம் மற்றும் ஆலயம் தொடர்பான சர்ச்சை எழும்போது உணர்ச்சிவயப்பட்டு பதிலடி கொடு‌ப்பதை விடுத்து தெளிவான, முறையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என கருத்து தெரிவித்தார்

லத்திஃபா கோயா. மேலும், காலம் காலமாக நீடித்து வரும் இந்த நில சிக்கல் இப்பொழுது சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு வன்முறையாக வலுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கௌசல்யா அவர்கள் பகுத்தறிவு அல்லது இறை மறுப்பு கொள்கையைக் கொண்ட இயக்கங்களும் ஏன் இந்தச் சிக்கலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். தந்தை பெரியார் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்திய போராட்டத்தை உதாரணமாகக் காட்டி இந்தச் சிக்கலை இந்து மத பிரச்சனை என மட்டும் பார்க்காமல் பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறை கொள்கையாக இதை அணுக வேண்டும் எனவும் பகிர்ந்து கொண்டார். இந்தச் சிக்கலை சில பொருப்பற்ற அரசியல்வாதிகளும் இந்துத்துவா அமைப்பினரும் தங்கள் கொள்கைப்பரப்பிற்குப் பயன்படுத்தி வருவதையும் கண்டித்து பேசிய அவர் இன்னும் சாதிய அடிப்படையில் சில ஆலய தலைமைத்துவம் இயங்கி வருவதையும் அதன் விளைவாக அதிகரித்துள்ள சிறுதெய்வ வழிப்பாட்டுத் தலங்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து இடது சாரி தரப்பின் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார் அருட்செல்வன். பெருமுதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்குமிடையே நிலவும் வர்க்க போராட்டமே இன்று நிலம் மற்றும் ஆலய விவகாரத்தில் பிரதிபலிப்பதாக கருத்து தெரிவித்தார். இன்று தோட்டங்களிலும் மருத்துவமனை, இரயில்நிலையம் அருகே எழுப்பப்பட்ட ஆலயங்களும் அன்றைய பாட்டாளிகளால் எழுப்பப்பட்டவை ; இந்தச் சிக்கலை மதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் பாட்டாளி மக்களுக்கும் பாமரர்களுக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறையாக இதை அணுகவேண்டும் என்று பகிர்ந்து கொண்டார்.

வழக்கறிஞரான குணசேகரன் இந்த சிக்கலில் உள்ள சட்ட நுணுக்கங்களைப் பற்றி கருத்துரைத்தார்.

Scroll to Top