சிலாங்கூர், பத்து கேவ்ஸ் பகுதியில் சமூகம் சார்ந்த பல்துறை உளவியல் ஆலோசனை, சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதற்காக நிதி திரட்டும் நோக்கத்திற்கு அடித்தளம் ஆரம்பிக்க பட்டுள்ளது.
மன்னார் மன்னன் மற்றும் கேஏ குணா தொடக்கி வைக்கவிருக்கும் இந்த இரவு நிதி திரட்டும் நிகழ்வுக்கு மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும், தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான ‘சொல்வேந்தர்’ டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களுக்கு, ‘மைஃபேமிலி’ யின் 15வது ஆண்டு நிதி திரட்டும் விழா விருந்துக்கு தலைமையேற்பார்.
இந்த மாபெரும் விழாவின் சிறப்பு விருந்தினர், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தரும், முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருமான டாக்டர் இஷாரி கே. கணேஷ் கலந்து கொள்வார் என கேஏ குணா ஏற்பாட்டாளர் தெரிவித்துக் கொள்கின்றார்.




