Vimarsagan Media

Home » Malaysia » தப்பியோடிய கைதி ஜாலான் பத்து 14, ஜாலான் கோம்பாகில் பிடிப்பட்டார்

தப்பியோடிய கைதி ஜாலான் பத்து 14, ஜாலான் கோம்பாகில் பிடிப்பட்டார்

ஒன்பது நாட்களாகத் தலைமறைவாக இருந்த தப்பியோடிய கைதி ஒருவர், ஜாலான் பத்து 14, ஜாலான் கோம்பாக் லாமா சாலையில் மீண்டும் பிடிக்கப் பட்டார். ஏப்ரல் 9 அன்று தப்பியோடிய கைதி, மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் உறுதிப்படுத்தினார்.

ஒரு அறிக்கையில், தேடுதல் வேட்டையில் ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஷாசெலி தனது நன்றியைத் தெரிவித்தார். “பொதுப் பாதுகாப்பையும் ஒழுங்கையும் நிலைநாட்ட, கைதியை வெற்றிகரமாக மீண்டும் பிடிப்பதற்கு வழங்கப்பட்ட உதவி மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

ஷா ஆலம் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்ட பிறகு, சுங்கை பூலோ சிறைக்கு மாற்றப்பட்டபோது ஒரு பாகிஸ்தானிய கைதி தப்பியோடியதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

Scroll to Top