இத்திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்குச் சொந்தமான சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சி கியோங் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய சமூகத்தினரிடையே உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 2025ல் ஒதுக்கப்பட்ட சுமார் 160 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டில் 60 மில்லியன் ரிங்கிட் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அமைச்சின் கீழுள்ள ஐந்து முதன்மை திட்டங்களின் மூலம் ‘முட்ரா’ விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
“அதில் குறிப்பாக தெக்கூனுக்கு 120 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாட்டுக்கு 15 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ வங்கிக்கு 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும். இந்திய மகளிர் தொழில்முனைவோர் அதிகாரமளித்தல் திட்ட நிதி மூலம் அமானா இக்தியார் 27 மில்லியன் ரிங்கிட்டை வழங்குகிறது. அதே நேரத்தில் எஸ்கேஎம், பக்தி மதானி திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரிங்கிட், எஸ்கேஎம் சுழல் மூலதன நிதிக்கு 10 மில்லியன் ரிங்கிட் என மொத்தம் 11 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறியிருந்ததாக பெர்னாமா தெரிவித்தது.
அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,805 இந்திய தொழில்முனைவோர் நேரடியாகப் பயனடைந்து வருவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்




