Vimarsagan Media

Home » Malaysia » தொழிலாளர் தினம் – ரெயின் ரேவ் நீர் இசை விழாவை முன்னிட்டு, புக்கிட் பிந்தாங் சாலை ஏப்ரல் 29 முதல் மே 2 வரை மூடப்படும்

தொழிலாளர் தினம் – ரெயின் ரேவ் நீர் இசை விழாவை முன்னிட்டு, புக்கிட் பிந்தாங் சாலை ஏப்ரல் 29 முதல் மே 2 வரை மூடப்படும்

கோலாலம்பூரில் நடைபெறும் உலக தொழிலாளர் தின கொண்டாட்டம் மற்றும் ரெயின் ரேவ் நீர் இசை விழாவை முன்னிட்டு, ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலை ஏப்ரல் 29 முதல் மே 2 வரை வாகனப் போக்குவரத்திற்காக மூடப்படும் என்று மலேசிய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

விசிட் மலேசியா 2026 உடன் இணைந்து நடைபெறும் இந்த இரண்டு நிகழ்வு களும், ஏப்ரல் 30 முதல் மே 2 வரை புக்கிட் பிந்தாங்கில் நடைபெறும்.

“ஏப்ரல் 22 முதல் புக்கிட் பிந்தாங்கைச் சுற்றியுள்ள சாலைகளும் படிப்படியாக மூடப்படும்,” என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை, வார நாட்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலையில் பகுதி அளவிலான சாலை மூடல்கள் நடைபெறும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில், இந்தச் சாலைகள் நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் ராஜா சூலான் மற்றும் ஜாலான் இம்பி ஆகிய சாலைகளுக்குப் போக்குவரத்து திருப்பி விடப்படும் என்றும் மலேசிய சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

“நகர மையத்திற்குப் பயணம் செய்யும்போது, ​​பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கடுமையாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.”

Scroll to Top