Vimarsagan Media

Home » World » 2008க்கு பின் பிறந்தவர்களுக்கு ஆயுள் கால சிகரெட் தடை: செய்யும் மசோதா!

2008க்கு பின் பிறந்தவர்களுக்கு ஆயுள் கால சிகரெட் தடை: செய்யும் மசோதா!

2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகையிலை வாங்கு வதைத் தடைசெய்யும் மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உலகில் எவ்வளவுப் பெரிய வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் நாடுகளாக இருந்தாலும் சரி, அந்நாட்டின் இளம் தலைமுறையினரே அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர். அதனால் இளம் தலைமுறையினரை வழிநடத்துதல் என்பது ஒவ்வொரு நாட்டின் முக்கிய கடமையாகும்.

அந்தவகையில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் போதைப்பொருட்க ளுக்கு அடிமையாகக்கூடாது என ஐக்கிய ராச்சியம் சட்டம் ஒன்றை இயற்றி உள்ளது. அதாவது, 2008 ஆம் ஆண்டிற் குப் பிறகு பிறந்த எவரும் இங்கிலாந்தில் புகையிலைப் பொருட்களை வாங்குவ தைத் தடை செய்யும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதன் மூலம் “புகையிலை இல்லாத தலைமுறையை” உருவாக்க முடியும் என அந்நாட்டு அமைச்சர்கள் நம்புகின்றனர். ‘புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் மசோதா’வின் கீழ் 2009 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் இங்கிலாந்து முழுவதும் சட்டப்பூர்வமாக புகையிலை விற்கப் படாது.

மேலும் குழந்தைகள் இருக்கும் இடங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளி யே சிகரெட் அல்லது வேப் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.அடுத்த வாரம் அரசரின் ஒப்புதலைப் (Royal Assent) பெற்றவுடன் சட்டமாக நடைமுறைக்கு வரும்.

Scroll to Top