Vimarsagan Media

Home » Entertainment » மற்றவர்கள் நினைப்பது போன்று நடிப்பில் ஆர்வமும் திறமையும் இல்லை.

மற்றவர்கள் நினைப்பது போன்று நடிப்பில் ஆர்வமும் திறமையும் இல்லை.

கட்சி சேர, ஆச கூட, பவழ மல்லி போன்ற ஆல்பங்கள் மூலம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசையமைப் பாளர் சாய் அபயங்கர். அதையடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரைக்கு வந்த டியூட் படத்திற்கு இசையமைத்து சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள கருப்பு, அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா மற்றும் பென்ஸ், மார்ஷல், தனுஷ் 55 என பல படங்க ளுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை கயாடு லோஹருடன் இணைந்து அவர் நடனமாடிய பவழ மல்லி பாடல் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படியான நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சாய் அபயங்கர் ஹீரோவாக நடிக்க போவதாக ஒரு செய்தி சில தினங்களாக வைரலாகி வந்தது.

இந்த செய்தியை மறுத்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சாய் அபயங்கர். அதில், நான் ஹீரோவாக நடிக்க போவதாக வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்க தான் ஒப்பந்தமாகி உள்ளேன். அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மேலும், மற்றவர்கள் எல்லாம் நினைப்பது போன்று எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நடிப்பு திறமையும் என்னிடத்தில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சாய் அபயங்கர்.

Scroll to Top