Vimarsagan Media

Home » Malaysia » நல்ல மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ஏன் இடம் வழங்கவில்லை எனும் தீர்வை பல்கலைக்கழகத்திடம் தெரிவிக்கலாம்!

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ஏன் இடம் வழங்கவில்லை எனும் தீர்வை பல்கலைக்கழகத்திடம் தெரிவிக்கலாம்!

பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTAs) மாணவர் சேர்க்கையானது, அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சம்பந்தப்பட்ட மாணவர்களையும் பாதிக்கும் அளவிற்கு இனி அரசியல் மயமாக்கப்படாது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷம்ப்ரி அப்துல் காதிர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்தா-க்களில் IPTA மாணவர் சேர்க்கை தகுதியின் அடிப்படையில் நடை பெறுகிறது என்றும், எழும் எந்தவொரு பிரச்சினையையும் பல்கலைக்கழக மையத்திடம் (UPU) தெரிவிக்கலாம் என்றும் ஸம்ப்ரி கூறினார்.

“இந்த விஷயத்திற்கு அனைத்துத் தரப்பினரும் உரிய கவனம் செலுத்து வார்கள் என்று நம்புகிறேன். நல்ல மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவருக்கு ஏன் இடம் வழங்கப் படவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருந்தால், அந்த விஷயத்தை பல்கலைக்கழக மையத்திடம் (UPU) தெரிவிக்கலாம்.”

“பெற்றோர்களுக்கு விளக்கங்களை அளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஏனெனில், இவை தங்களுக்கென சொந்த லட்சியங்களைக் கொண்ட நமது பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Scroll to Top