சிலாங்கூர் சுல்தான் ஷரப்புடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சிலாங்கூரில் நடைபெறவுள்ள 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகள் (சுக்மா) திட்டமிட்டபடி நடைபெறும்.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில ஆட்சியாளர் வியாழக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமைச் சந்தித்து, செலவுக் குறைப்பு மற்றும் விவேகமான செலவினங்களுடன் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை சுக்மா போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜோஹரி, சுல்தானின் ஒப்புதலுக்குத் தனது நன்றி யைத் தெரிவித்ததோடு, போட்டிகளை நடத்த முடிவெடுத்து நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காகப் பிரதமருக்கும் நன்றி கூறினார்.
“மேலும், அடுத்த ஆண்டு இங்கு நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (SEA Games) மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இளம் விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்துத் தயார்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக சுக்மா 2026 அமைகிறது,” என்றும் அவர் கூறினார்.
சுக்மா 2026 விழாவை குறைந்த செலவில் நடத்துவதை உறுதிசெய்ய, மாநில அரசின் முழு ஒத்துழைப்பையும் வழங்கு வதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி உறுதியளித்ததாகவும், அவருடன் இதுகுறித்து விவாதித்த தாகவும் தௌஃபிக் மேலும் கூறினார்.




