இணையம் வழி கடன் மோசடி கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், இந்தோனேசிய நாட்டவர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் அந்தக் கும்பலின் மேற்பார்வையாளராகவும், மற்ற இருவரும் பாதிக்கப்பட்டவர் களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் கடன் முகவர்களாகவும் பணியாற்றிய தாக மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பதிட் கூறினார்.
மார்ச் மாதம் முதல் இணையவழி கடன் மோசடிகளை நடத்துவதற்காக அழைப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வணிக வளாகத்தில் காவல்துறை சோதனை நடத்தியதாக அவர் கூறினார். கணினிகள், கைபேசிகள் மற்றும் நெட்வொர்க்கிங் சாதனங்கள் போன்ற பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 முதல் 30 வயதுக்குட்பட்ட அந்த மூன்று சந்தேக நபர்களும் நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.




