சுங்கைப்பட்டாணியில் தனது மனைவியைத் தாக்கி, அவருக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தி யதாக நம்பப்படும் நபர், இதற்கு முன்னர் ஜொகூரில் நடந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அதே நபர்தான் இவர் என்று காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வழக்கில் அவரது மனைவி கடுமை யாகத் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் ஆளாக்கியவர்.
கோலா மூடா காவல் நிலையத் தலைவர் ஹன்யான் ராம்லான், 43 வயதான அந்த சந்தேக நபரை காவல்துறை தேடி வருவ தாகவும், தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
“ஜொகூர் வழக்கில் சம்பந்தப்பட்ட அதே நபர்தான் இவர். நாங்கள் அனைத்து கோணங்களிலிருந்தும் துப்புகளை விசாரித்து, இந்தச் சம்பவத்தில் சம்பந்த ப்பட்ட சந்தேக நபரைத் தேடி வருகிறோம்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இங்குள்ள அம்பாங்கான் ஹைட்ஸில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களுக்காக சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
நேற்று, 39 வயதான அரசு ஊழியர் ஒருவர், தனது கணவரால் தாக்கப் பட்டதன் விளைவாக, உடல் காயங்கள் மற்றும் முகத்தில் சிராய்ப்புகளுக்கு உள்ளாகி, 12 வார கருச்சிதைவு ஏற்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டில், அப்போது கர்ப்பிணியாக இருந்த ஜஹிதா நோர்டின், ஜொகூரின் லார்கின் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவரால் தாக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, அவரது மண்டையோட்டின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய அளவு க்கு மூளை இரத்தக் கசிவு, அத்துடன் தாடை, முதுகுத்தண்டு மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் உட்பட கடுமையான காயங்கள்ஏற்பட்டன.
அப்போது ஜஹிதா, 2021 நவம்பரில் ஒரு ஆண் குழந்தையைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்த போதிலும், இன்னும் படுக்கையிலேயே இருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, ஜஹிதாவிற்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்தி அவரை கோமா நிலைக்குத் தள்ளியதற்காக, அவரது கணவரும் வர்த்தகருமான 43 வயதான ரோஸ்மைனி அப்துல் ராவ்ஃபிற்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஜொகூர் பாரு உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பின்னர், ரோஸ்மைனியின் வழக்கறிஞர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது




