Vimarsagan Media

Home » Malaysia » இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவரோடு 5 பேர் மரணம்

இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவரோடு 5 பேர் மரணம்

அலோர் காஜாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர இடைவெளியில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி சாலை விபத்து க்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

முதல் விபத்து, பிற்பகல் 3.40 மணிக்கு ஜாலான் ஃபெல்டா ஊத்தான் பெர்ச்சாவில் நடந்தது. இதில் ஒரு கார் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மலாக்காவிலிருந்து செகாமட் நோக்கி நான்கு பேரை ஏற்றிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குத் திரும்பியதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் கண்காணிப் பாளர் அஹ்மத் அபு பக்கர் கூறினார்.

காரின் பின் இருக்கையில் இருந்த 24 வயது ஆண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். மேலும் இருவரான, 23 வயது ஓட்டுநர் மற்றும் 24 வயது பயணி ஆகியோர், நேற்று அதிகாலை 12.45 மணி மற்றும் காலை 10.20 மணிக்கு மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

“23 வயதான பெண் பயணி ஒருவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 59 வயதான லாரி ஓட்டுநரும் அவரது 28 வயதான உதவியாளரும் காயமடைந்து, நெகிரி செம்பிலானில் உள்ள தம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்,” என்று அகமது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Scroll to Top