பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள ஆறுகளில் பேரழிவை ஏற்படுத்திய அந்த விலங்குகளைக் கொல்லும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கொலம்பிய அரசாங்கத்திடம் முறை யாகக் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார்.
அதற்குப் பதிலாக, தனது வந்தாரா விலங்குகள் மையத்தில் “80 விலங்கு களையும் ஒரு நிரந்தர இல்லத்திற்குக் கொண்டுவரும் பாதுகாப்பான, அறிவியல் பூர்வமான இடமாற்றத்திற்கு” அனுமதிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள இந்த பிரம்மாண்ட மான மிருகக்காட்சிசாலை, தன்னை “உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மீட்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையங்க ளில் ஒன்று” என்று கூறிக்கொள்கிறது.
இந்தியாவின் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தின்படி, வந்தாராவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான யானைகள், 50 கரடிகள், 160 புலிகள், 200 சிங்கங்கள், 250 சிறுத்தைகள் மற்றும் 900 முதலைகள் உள்ளிட்ட பிற விலங்குகள் உள்ளன.
மிகவும் அருகிவரும் மற்றும் அரிய வகை உயிரினங்களின் இறக்குமதி உட்பட, வந்தாராவின் பெருமளவிலான விலங்கு இறக்குமதி குறித்து நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்காவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டதும், பல டன்கள் வரை எடை கொண்டதுமான நீர்யானைகளை, எஸ்கோபர் 1980-களில் கொலம்பியா விற்குக் கொண்டு வந்தார்.
1993-ல் எஸ்கோபரின் மரணத்திற்குப் பிறகு, அவரது தனியார் விலங்கியல் பூங்காவிலிருந்து வந்த நீர்யானைகள், கொலம்பியாவின் மக்டலினா ஆற்றின் செழிப்பான கரைகளில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கின. அங்கு அவை மீனவர்களைத் தாக்கியதால், அவற்றைக் கொன்று குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இண்டஸ்ட்ரீஸின் கோடீஸ்வரரின் மகனான ஆனந்த் அம்பானி, வந்தாராவில் விலங்குகளுக்கு ஒரு புதிய இல்லத்தை வழங்குவதற்கான விரிவான திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார்.




