Vimarsagan Media

Home » Malaysia » மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு சுகாதாரத் துறையில் தொழில் வளர்ச்சிப் பாதை மறுஆய்வு

மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு சுகாதாரத் துறையில் தொழில் வளர்ச்சிப் பாதை மறுஆய்வு

மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும், சுகாதாரத் துறையில் உள்ள ஊக்கத்தொகைகள் மற்றும் தொழில் வளர்ச்சிப் பாதைகளை மறுஆய்வு செய்வதற்கும், சுகாதார அமைச்சு ஒரு சிறப்பு அமைச்சுளுக்கு இடையிலான பணிக்குழுவை அமைத்து உள்ளது.

சபா, சரவாக் மற்றும் நாடு முழுவதும் மருத்துவர்களின் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக நீடிக்கிறது என்றும், இதற்கு அமைச்சுகளுக்கு இடையிலான ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்றும் அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கெஃப்லி அஹ்மட் கூறினார்.

பற்றாக்குறை மற்றும் சீரற்ற விநியோகம் ஆகிய பிரச்சினைகளை சுகாதார அமைச்சால் மட்டும் தீர்க்க முடியாது என்றும், இதற்கு உயர்கல்வி அமைச்சகம், பொதுச் சேவை ஆணையம் மற்றும் நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.

சபாவில், சுகாதார அமைச்சு பயிற்சி மருத்துவர்களின் நியமனத்தை அதிகரிப்பது உட்பட பல நடவடிக்கை களை எடுத்துள்ளது. உதாரணமாக, சண்டகானில் உள்ள டச்சஸ் ஆஃப் கென்ட் மருத்துவமனையில் 42 புதிய பட்டதாரி மருத்துவ அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர், அவர்களில் 70 சதவீதம் பேர் சபாவைச் சேர்ந்தவர்கள்.

“சபாவில் பணியாற்ற மருத்துவ அதிகாரிகளை ஈர்ப்பதில் உள்ள சவால் குறிப்பிடத்தக்கது என்பதை நாங்கள் அறிவோம், எனவே இந்த முயற்சி மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று நேற்று இங்கு சண்டகான் நலவாழ்வு மையத்தைத் திறந்து வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Scroll to Top