RM1.1 பில்லியன் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ராம்லியை திங்கட்கிழமை அன்று அழைக்கவிருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் பொருளாதார அமைச்சர், மே 4 ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில் புத்ராஜயாவில் உள்ள MACC தலைமை யகத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக MACC-யின் மூத்த விசாரணை இயக்குநர் டத்தோ முகமது ஹஃபாஸ் நசார் கூறினார்.
இந்த விசாரணை, பொருளாதார அமைச்சுக்கும் சிப் வடிவமைப்பு நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸுக்கும் இடையிலான ஒரு மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டுள்ளது.
“பிப்ரவரி 13, 2025 அன்று விசாரணைகள் தொடங்கியதிலிருந்து, இதுவரை, பல் வேறு அரசு நிறுவனங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 22 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று ஹஃபாஸ் கூறினார்.
“அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சாய், இவரது உண்மையான பெயர் சாய் ஜின் ஷெர்ன், கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் என்றும் அவர் மேலும் கூறினார்




