Vimarsagan Media

Home » Malaysia » கம்பராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஓர் உலகம், ஒவ்வொரு சொல்லும் ஒரு சுடர் :- எம் சரவணன்

கம்பராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஓர் உலகம், ஒவ்வொரு சொல்லும் ஒரு சுடர் :- எம் சரவணன்

எனது முப்பதாவது வயதின் விடியலில் கம்பன் எனும் இலக்கிய மாமேதை எனக்குள் பிரவேசித்தார். இன்று அறுபதின் வாசலைத் தொடப் போகும் இந்நேரத்தில், அவரது மொழிநடையின் மெருகும், தத்துவங்களின் ஆழம் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன என ஒரு கணம் தனது நினைவுகளை மெல்ல வருடுகிறார் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்

கம்பராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஓர் உலகம், ஒவ்வொரு சொல்லும் ஒரு சுடர், ஒவ்வொரு சிந்தனையும் ஒரு வாழ்வியல் வழிகாட்டி. பாத்திரங்களின் வழியாக மனித வாழ்வின் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் கம்பனைக், காதால் கேட்டு, மனதால் லயித்து,

உள்ளத்தில் நயந்து, உயர்ந்து வியந்து நோக்கும் இப்பயணம் தன் வாழ்வின் இனிய பகுதி என்றும் தமதுரையில் அவர் மொழிக்கும் பாராட்டு கேட்போர் மத்தியிலும் கம்பன் பால் ஆவலைத் தூண்டி விடுகிறார்.

சிந்தையின் தீபம், சொல்லின் சோலை, எழுத்தின் இசை நம் உயிரோடு கலந்திட, என்றும் எழும் அவர் புகழ் எம்முள் வாழ்க. கம்பனுக்காக நடத்தப்படும் ‘கம்பன் விழாவில்’ ஓர் அங்கமாக இருப்பது எனக்கு அளவிட முடியாத ஆனந்தம். அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடே,

கொழும்பு கம்பன் விழாவிற்கு அவர் படையெடுத்துச் சென்றாக அறிய முடிகிறது்

2026 ஆம் ஆண்டின் கொழும்பு கம்பன் விழாவின் தொடக்க விழாவில் முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டு அகில இலங்கைக் கம்பன் கழகம் சார்பில் உயர்ந்த தகுதியுடைய ஐவருக்கு விருதுகளை வழங்கியதில் இன்னும் பெருமை. மேலும், முதல் நாளான அன்று நடைபெற்ற எழிலுரை அரங்கைத் தலைமையுரையாற்றித் தொடக்கி வைத்ததில் கம்பனின் அருளை உணர்ந்தேன் என்கிறார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ கா தேசியத் துணைத் தலைவருமானடத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.

Scroll to Top