Vimarsagan Media

Home » Malaysia » கிராம்ம் மற்றும் மேம்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளராக சுரியானி அஹ்மட் இன்று முதல் நியமனம்

கிராம்ம் மற்றும் மேம்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளராக சுரியானி அஹ்மட் இன்று முதல் நியமனம்

அவரது நியமனத்திற்கு தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது திறமை மற்றும் அனுபவத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

“மலேசியா மடானி இலக்குகளை அடைவதற்காக, பொருளாதார மேம்பாட்டில் அமைச்சகத்தின் முயற்சிகள் அனைத்திலும் சிறந்து விளங்கவும், பொதுச் சேவை சீர்திருத்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற நலனை மேம்படுத்தவும் அவரால் முடியும்,” என்று அவர் கூறினார்.

58 வயதான சுரியானி, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் இளங்கலைப் பட்டத்தையும் (சிறப்பு), மலேசிய தேசிய பல்கலைக் கழக த்தில் உத்தி மற்றும் ராஜதந்தி ரத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்று ஷம்சுல் அஸ்ரி கூறினார்.

அரசாங்க நிர்வாகம், பொதுக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் ஆகிய வற்றில் சுரியானிக்கு விரிவான அனுபவம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இவர் இதற்கு முன்னர் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தொழில் முனைவோர் அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றில் பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

Scroll to Top