Vimarsagan Media

Home » Malaysia » பள்ளி நுழைவாயிலில் வேன் மோதலில்:- 2ஆம் வகுப்பு மாணவி மரணம்

பள்ளி நுழைவாயிலில் வேன் மோதலில்:- 2ஆம் வகுப்பு மாணவி மரணம்

ஜொகூர் பாரிட் சுலோங்கிற்கு அருகிலுள்ள எஸ்.கே. செரி மைமோன் பள்ளியின் நுழைவாயிலில் நேற்று மதியம் ஒரு வேன் மோதியதில் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

எட்டு வயதான நூர் ஐனி உமைரா ஃபரீஸ், மதியம் சுமார் 12.40 மணியளவில் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது வேன் மோதியதாக ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் அவரது மரணத்தை உறுதி செய்தனர்.

பொருட்களை விநியோகித்த பிறகு, பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த வேன், வாயிலை விட்டு வெளியேறும் போது அந்த மாணவி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்த பல பெற்றோர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டனர்.

மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பத்து பஹாட் காவல் நிலையத் தலைவர் ஷாருலானுவார் முஷாத்தத் அப்துல்லா சானி, இதுகுறித்து விசாரணை தொடங்கப் பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்

Scroll to Top