Vimarsagan Media

Home » Uncategorized » பண்டார் ஸ்ரீ செண்டாயானில் ஒரு , பெண் பராமரிப்பில் இருந்தபோது ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பண்டார் ஸ்ரீ செண்டாயானில் ஒரு , பெண் பராமரிப்பில் இருந்தபோது ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸஹர் அப்துல் ரஹீம் கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் தனது துறைக்குக் கிடைத்தது என்றார். 30 வயதுகளில் உள்ள மழலையர் பள்ளி ஆசிரியையான அவர், இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை மயக்க நிலையில் இருந்ததைக் கண்டதாகவும், பின்னர் அக்குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.

“பின்னர் அக்குழந்தை துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பணியில் இருந்த மருத்துவர், குழந்தைக்கு இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (CPR) செய்த பின்னரே, அக்குழந்தை இறந்து விட்டதைக் கண்டார்.

“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 30 வயதுகளில் உள்ள அந்த ஆயாவால் அக்குழந்தை பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் அக்குழந்தை தொட்டிலில் உறங்க வைக்கப்பட்டு, ( சூப்பி கித்தா ) சிலிக்கான் பாசிஃபையர் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்

Scroll to Top