பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கெலானா ஜெயா இலகுரக ரயில் பாதையில் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், நம்பகமான சேவைகளை வழங்குவதில் தங்கள் நிறுவனம் உறுதியாக இருப்பதாக ரேபிட் ரெயில் எஸ்.டி.என். பி.எச்.டி இலகுரக ரயில் பாதையின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நார் அஸ்மி முகமது யூசோஃப் கூறினார்.
46.6 கி.மீ. நீளமும், 37 நிலையங்களும், 74 ரயில்களும் கொண்ட கெலானா ஜெயா வழித்தடத்தில், 2020 மற்றும் 2026-க்கு இடையில் பயணிகளின் எண்ணிக்கை 100%-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக உச்ச நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப் பது, செயல்பாடுகளில் அதிக அழுத் தத்தை ஏற்படுத்துகிறது என்று நார் அஸ்மி கூறினார்.
“இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எங்கள் பயணிகளின் எண்ணிக்கை 109%-ஐ எட்டியது. இதைச் சமாளிக்க, செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் ரயில்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்,” என்று கெலானா ஜெயா வழித்தடத்தில் மேற்கொள்ளப் படும் மேம்பாடுகள் குறித்த ஊடக சந்திப்பின்போது அவர் கூறினார்.
கூடுதல் காவலர்களைப் பணியமர்த்து வது மற்றும் நடைமேடைத் தடுப்புகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் நிலையங்களில் பாதுகாப்பு கண் காணிப்பை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளையும் ரேபிட் ரெயில் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.




