சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தனது இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவையை திங்கட்கிழமை (மே 25) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக நிறுத்தம், பொது இணையதளம், கியோஸ்க்குகள் மற்றும் JPJ-யின் வர்த்தகப் பங்காளிகளான MyEG மற்றும் eAuto Sdn Bhd உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் வழிகளையும் உள்ளடக்கியது.
பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் அனுமதியின்றி வாகன உரிமை மாற்றப்படுவது குறித்த புகார்களைத் தொடர்ந்து இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக JPJ-யின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.
“குறிப்பாக, துறையின் கணினி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பதிவுகள் தொடர்பான விஷயங்களை JPJ மிகவும் தீவிரமாகக் கருதுகிறது,” என்று அவர் ஞாயிற்றுக் கிழமை (மே 24) வெளியிட்ட அறிக்கை யில் கூறினார்.
திங்கட்கிழமை முதல், தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான அனைத்து வாகன உரிமை மாற்றங் களும் JPJ கவுன்டர்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
தனிநபர் உரிமையைப் பொறுத்தவரை, அரசு JPJ அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் அதே நாளில் பரிவர்த்த னை களை முடிக்க முடியும்.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்த வரை, முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து உறுதிப் படுத்தல் மற்றும் ஒப்புதல் செயல் முறைக்கு ஐந்து முதல் ஏழு வேலை நாட்கள் ஆகும்.இதற்கிடயில், eAuto வழியாக நடைபெறும் தற்காலிக உரிமைப் பரிமாற்ற முறை (STMS) மூலமான பரிவர்த்தனைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக ஏடி ஃபட்லி கூறினார்.
eSerahan Tukar Milik (eSTM) முறை மூலமான நிரந்தர உரிமைப் பரிமாற்ற முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார் நிறுவனங்கள் உட்பட, இதுபோன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விரும்பும் தரப்பினர், இப்போது மாநில JPJ அலுவலகங்கள் அல்லது கிளைகளில் விண்ணப்பங் களைச் சமர்ப்பிக்க வேண்டும்.




