வாகன உரிமைப் பரிமாற்றங்களுக்கான தனது இணையவழிச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், இந்த வாரத்தின் பிற்பகுதியில் மட்டுமே அந்தச் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) ஒப்புக்கொண்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக், ஜேபிஜே-யின் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ராம்லியுடன் இதுகுறித்து விவாதித்ததாகவும், அந்தச் சேவை அமைப்பில் உள்ள முறைகேடு கள் காரணமாகத் துறைக்கு ஏற்படும் பொறுப்புகள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
“இருப்பினும், கணினி அமைப்பை மேம்படுத்தும் பணிகள், சாதாரண பயனர்களின் அன்றாடப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமலும், JPJ அலுவலகங்களில் பெரும் நெரிசலை ஏற்படுத்தாமலும் இருப்பதை உறுதி செய்யுமாறு JPJ-க்கு அறிவுறுத்தி உள்ளேன்.”
“அத்தகைய பரிவர்த்தனைகளுக்கான இணையவழிச் சேவைகளை உடனடியாக மீண்டும் தொடங்க JPJ ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், மேம்பாட்டுப் பணிகளுக்காக கணினி அமைப்பில் செய்யப்படும் எந்தவொரு தற்காலிக இடைநிறுத்தமும், வரவிருக் கும் இந்த நீண்ட வார இறுதி விடுமுறை யின் போது மட்டுமே மேற்கொள்ளப் படும்,” என்று லோக் தனது முகநூல் பதிவில் கூறினார்.
வெசாக் தினம் ஞாயிற்றுக்கிழமையும், யாங் டி-பெர்டுவான் அகோங், சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் பிறந்த நாட்களும், ஹரி கவாய் பண்டிகையும் திங்கட்கிழமையும் வருகின்றன.
வாகன உரிமை மாற்றத்திற்கான JPJ-யின் இணையவழிச் சேவை இன்று முதல் இடைநிறுத்தப்படுவதாக ஏடி அறிவித்தது. இது பொது இணையதளம், கியோஸ்க்குகள் மற்றும் JPJ-யின் வர்த்தகப் பங்காளிகளான MyEG மற்றும் eAuto Sdn Bhd உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் வழிகளையும் உள்ளடக்கியது.
இதன் பொருள், தனிநபர் மற்றும் தனியார் நிறுவன உரிமை தொடர்பான அனைத்து வாகன உரிமை மாற்ற விஷயங்களும் JPJ கவுன்டர்களில் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்பதாகும்




