Vimarsagan Media

Home » Malaysia » சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. சரிவில் இறங்கும்போது, ​​ ஒரு வாகனம் மோதியதில், தம்பதியர் படுகாயம்

சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. சரிவில் இறங்கும்போது, ​​ ஒரு வாகனம் மோதியதில், தம்பதியர் படுகாயம்

காஜாங் -சில்க் நெடுஞ்சாலையின் 3.5 கி.மீ. சரிவில் இறங்கும்போது, ​​அதிவேகமாக வந்ததாகக் கருதப்படும் ஒரு வாகனம் மோதியதில், தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். ஹரியான் மெட்ரோவின்படி, இரவு 9.10 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 60 மற்றும் 61 வயதுடைய உள்ளூர் வாசிகளான இருவருக்கும் தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப், ஆரம்பகட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட வாகனம் கம்போங் பாரு பாலகோங்கிலிருந்து காஜாங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது என்றார்.

காஜாங்கை நோக்கிய சில்க் நெடுஞ்சாலையின் நடுப்பாதையில், சரிவில் இறங்கும்போது கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதிய தாகவும் அவர் கூறினார்.

“இந்த விபத்தில், 35 வயதான உள்ளூர் ஆண் ஓட்டுநருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக செர்டாங்கில் உள்ள சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த எவரும், விசாரணைக்கு உதவுவதற்காக, விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சைஃபுதீன் சாதுனை 011-21119379 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்

Scroll to Top