Vimarsagan Media

Home » Malaysia » சிறந்த கல்விப் பணியாளர் விருது: பேராசிரியர் (அறிவியல் – தொழில்நுட்பத் துறை) , டாக்டர் ரமேஷ் டி. சுப்ரமணியம்

சிறந்த கல்விப் பணியாளர் விருது: பேராசிரியர் (அறிவியல் – தொழில்நுட்பத் துறை) , டாக்டர் ரமேஷ் டி. சுப்ரமணியம்

மலாயா பல்கலைக்கழகத்தின் (ACUM) 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதுடன் இணைந்து வழங்கப்படும், சிறந்த கல்விப் பணியாளர் விருது: பேராசிரியர் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை) பெற்றவர் பேராசிரியர் டாக்டர் ரமேஷ் டி. சுப்ரமணியம்

அவர் ஒரு முன்னணிப் பொருள் விஞ்ஞானி மற்றும் இயற்பியல் துறையில் மலேசியாவின் முதல் TWAS ஃபெலோ ஆவார். இவர், குறிப்பாகப் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்திற்கான ஹைட்ரோஜெல் பாலிமர் எலக்ட்ரோலைட்டுகளின் புத்தாக்கத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளார்.

அவரது நிபுணத்துவமும் அர்ப்பணிப்பும் மலாயா பல்கலைக்கழகத்தின் பெயரை சர்வதேச அளவில் நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், பசுமை ஆற்றல், மேம்பட்ட பொருட்கள் மற்றும் நிலையான ஸ்மார்ட் நகர மேம்பாடு ஆகிய துறைகளில் ஆராய்ச்சிச் சிறப்பின் மையமாக மலாயா பல்கலைக்கழகத்தின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

இந்தச் சாதனை, சமூகம் மற்றும் தேசிய வளர்ச்சியின் நலனுக்காக ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் கல்விச் சிறப்பு ஆகியவற்றின் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் அவரது தொடர்ச்சி யான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

Scroll to Top