கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்கி படித்து வருகிறன்றனர்.
இந்தநிலையில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாணவிகள் நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிகொண்டிருக்கும் போது தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் 17 மாணவிகள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்




