நேற்று ஜூன் 1 ஆம் தேதி காலை, SLE சாலையில் நடந்த விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணைகளுக்குப் பதிலளித்த காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையும் (SCDF), காலை சுமார் 8.15 மணியளவில் BKE செல்லும் திசையில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிவித்தனர்
லென்டர் அவென்யூ வெளியேறும் வழிக்கு முன்பாக இந்த விபத்து நடந்ததாக SCDF கூறியது. தாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஒரு கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தாகவும், தங்களது அதிகாரிகள் நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாகவும் அது மேலும் தெரிவித்தது
கார் சாலையில் சறுக்கிச் சென்றதாக நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்தது. காரில் பயணித்த 34 வயது ஆண் பயணி ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். அவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியது.
கார் ஓட்டுநரான 26 வயது பெண், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.




