முதல் லீ சோங் வெய் கோப்பைக்கான தேதிகளும் இடமும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இப்போட்டியானது ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 6 வரை புக்கிட் கியாராவில் உள்ள ஸ்டேடியம் ஜுவாராவில் நடைபெற உள்ளது.
இந்த இளையோர் போட்டியானது பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இது மொத்தம் RM100,000 பரிசுத்தொகையை வழங்குகிறது, இதன் மூலம் இது நாட்டின் பணக்கார இளையோர் பேட்மிண்டன் போட்டியாக விளங்குகிறது.
வெற்றியாளர்கள் அகாடமி பேட்மிண்டன் மலேசியாவில் (ABM) நடைபெறும் தேர்வு அமர்வில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
பதிவு ஜூன் 15 அன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும். இதில் 128 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் 32 இடங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.
“உறுதி செய்யப்பட்ட 128 பதிவுகளில் இருந்து யாராவது விலகினாலோ அல்லது காலியிடங்கள் இருந்தாலோ, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பங்கேற்பாளர்கள் தொடர்பு கொள்ளப் படுவார்கள்.
“போட்டியின் வடிவத்தின்படி, 64 வீரர்கள் கொண்ட பிரதான சுற்றில் உள்ள 32 இடங்களுக்காக 128 வீரர்கள் போட்டியிடுவார்கள்.” தகுதிச் சுற்றில் முன்னேறும் 32 வீரர்கள், தத்தமது மாநில பூப்பந்து சங்கங்களால் பரிந்துரைக்கப் பட்ட 32 வீரர்களுடன் இணைந்து, களத்தை முழுமையாக்குவார்கள்,” என்று லீ சோங் வெய் கோப்பை அமைப்பாளர் கள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.




