Vimarsagan Media

Home » Malaysia » தாய்லாந்து இறால் இறக்குமதிக்கு மலேசியா விதித்த தற்காலிகத் தடை:- பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

தாய்லாந்து இறால் இறக்குமதிக்கு மலேசியா விதித்த தற்காலிகத் தடை:- பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

ஐந்து வகையான தாய்லாந்து இறால் இனங்களின் இறக்குமதிக்கு மலேசியா விதித்துள்ள தற்காலிகத் தடையைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்த அனுதின், நீடித்த கட்டுப்பாடுகள் இறால் விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பரந்த கடல் உணவு விநியோகச் சங்கிலி யின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளதாக தாய்லாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரட்சடா தனடிரெக் கூறினார்.

இருதரப்பு வர்த்தகத்தைப் பேணுவ தோடு, தாய்லாந்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் ஒரு தீர்வைக் காண்பதற்காக, மலேசிய அதிகாரி களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்துமாறு துணைப் பிரதமர், வர்த்தக அமைச்சர் மற்றும் வேளாண்மை, கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு அனுதின் அறிவுறுத்தியுள்ளதாக ரட்சடா கூறினார்.

“இந்தப் பிரச்சினை தொடர அனுமதிக்கப்பட்டால், அது இறால் விலைகளையும் சிறு விவசாயிகளின் வருமானத்தையும் பாதிக்கக்கூடும்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தடையின் தாக்கம் இறால் விவசாயிகளைத் தாண்டி, சேகரிப்பா ளர்கள், பதப்படுத்தும் ஆலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் உள்ளிட்ட முழு விநியோகச் சங்கிலியையும் பாதிக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார்

Scroll to Top