Vimarsagan Media

Home » Malaysia » பல மாநிலங்களில் டிச 18 வரை கனமழை

பல மாநிலங்களில் டிச 18 வரை கனமழை

கோலாலம்பூர், 15/12/2025 : டிசம்பர் 18 வரை பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஓர் அறிக்கையில், மெட் மலேசியா பொது இயக்குநர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறுகையில் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் கடுமையான தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பஹாங்கின் குவாந்தன், பெக்கான் மற்றும் ரொம்பின் பகுதிகளிலும், ஜொகூரில் உள்ள மெர்சிங் மற்றும் கோத்தா டிங்கி ஆகிய பகுதிகளுக்கும் இதே அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேராக் (ஹுலு பேராக் மற்றும் கோலா கங்சார்), பகாங் (கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ஜெரான்டுட், தெமர்லோ, மாறன் மற்றும் பேரா) மற்றும் ஜொகூர் (சிகாமட், குளுவாங், கூலாய் மற்றும் ஜொகூர் பாரு) ஆகிய இடங்களுக்கு இதே காலப்பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமன், பெடோங், சரிகேய், சிபு மற்றும் முக்கா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வரை எச்சரிக்கை அளவிலான தொடர் மழை அமலில் இருக்கும் என்று முகமட் ஹிஷாம் கூறினார்.

Scroll to Top