பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கூட்டணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் ஒற்றுமைக் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்று அரசியல் எதிரிகளுக்கு நினைவூட்டியுள்ளார்.
இஸ்கந்தர் புத்தேரியில் பாரிசான் நேஷனல்-இன் ஜொகூர் தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவில் பேசிய ஜாஹிட், தேசிய ஸ்திரத்தன்மைக்கு பிஎன் னின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்று கூறினார்.
அம்மோ தலைவராகவும் இருக்கும் ஜாஹிட், பாரிசான் நேஷனலின் 30 நாடாளுமன்ற இடங்கள் இல்லாமல், தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையை பக்கத்தான் ஹரப்பான் பெற்றிருக்காது என்று கூறினார்.
மேலும், ஜொகூர் தேர்தலில் அனைத்து 56 இடங்களிலும் போட்டியிடுமாறுபி. என்-இன் எதிரிகளை அவர் வரவேற்றார்.
ஜொகூர் பாரிசான் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஜொகூர் பக்தான் மாநிலத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என்று முன்னதாகக் கூறியிருந்தது. வரவிருக்கும் நெகிரி செம்பிலான் தேர்தலில் அனைத்து 36 இடங்களிலும் போட்டியிடப் போவதாகவும் பிஎச் (PH) கூறியுள்ளது.
“நாங்கள் உங்களை அங்கே சந்திப்போம்,” என்று அவர் கூறினார்.
ஜொகூர் தேர்தல், பிஎன் (BN) கூட்டணியின் மறுமலர்ச்சியின் தொடக்கம் என்று ஜாஹிதட் கூறினார். தாங்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கூட்டணி என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.




