Vimarsagan Media

Home » Malaysia » அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து:- யூடியூபர் மாரிதாஸ் கைது

அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து:- யூடியூபர் மாரிதாஸ் கைது

அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு குறித்தும், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பற்றியும் யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவர் வெளியிட்ட படம், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்று பலரும் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் ஆதவ் உள்ளிட்டோர் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள வீட்டில் இருந்த மாரிதாஸை சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர்

Scroll to Top