Vimarsagan Media

Home » Malaysia » மலேசிய மகளிர் தேசிய கால்பந்து (ஃபுட்சல்) வீராங்கனை இன்தான் செரா ‘ஆஸ்ட்ரோ ரியா நடிக்கவிருக்கிறார்

மலேசிய மகளிர் தேசிய கால்பந்து (ஃபுட்சல்) வீராங்கனை இன்தான் செரா ‘ஆஸ்ட்ரோ ரியா நடிக்கவிருக்கிறார்

கணுக்காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக நீண்ட காலம் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டியிருந்த மலேசிய மகளிர் தேசிய கால்பந்து மற்றும் ஃபுட்சல் (futsal) வீராங்கனை இன்தான் செரா (Intan Serah), எதிர்பாராத விதமாக ‘ஆஸ்ட்ரோ ரியா’ (Astro Ria) தொலைக்காட்சியின் வரவிருக்கும் ‘Premier League: I Love You’ என்ற நாடகத் தொடரின் மூலம் நடிப்புத் துறைக்குத் திரும்புகிறார்.

2018-ஆம் ஆண்டு வெளியான ‘Gol & Gincu 2’ திரைப்படத்திற்குப் பிறகு, இன்தான் நடிக்கும் முதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் இதுவாகும்.

முழுப் பெயர் இன்தான் சாரா அனிசா ஜுல்கஃப்லி கொண்ட 26 வயதான இன்தான், ‘ஆஸ்ட்ரோ ரியா’வின் விளையாட்டு மற்றும் பயண அனுபவங்களை விவரிக்கும் ‘From KL To PL’ என்ற ரியாலிட்டி தொடரின் இரண்டு பருவங்களிலும் தோன்றியுள்ளார்.

இத்தொடர், புகழ்பெற்ற ஆங்கில பிரீமியர் லீக் (English Premier League) கால்பந்து மைதானங்களைப் பார்வையிடுவதற்காக மலேசிய பிரபலங்கள் கோலாலம்பூரிலிருந்து இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணத்தை மையமாகக் கொண்டிருந் தது.

“கால்பந்து தொடர்பான எந்தப் பணிகளும் இல்லாததால், எனக்குத் தாராளமாக நேரம் கிடைத்தது. எனவே, ‘Premier League: I Love You’ என்ற இந்தத் திட்டத்தில் பங்கேற்க முடியுமா என்று ‘ஆஸ்ட்ரோ’ கேட்டபோது, ​​நான் உடனடியாகச் சம்மதம் தெரிவித்தேன்.

“இது எனது முதல் தொலைக்காட்சி நாடகம் என்பதால் நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார். கமல் அட்லி, ஷான் லீ, ஹவா ரிஸ்வானா மற்றும் தீபன் ஜி (Theebaan G) ஆகியோரும் நடிக்கும் இப்புதிய தொடர், அடுத்த மாதம் ஒளிபரப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது

Scroll to Top