உலக அளவில் தங்கம் பெரும் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இன்றைய நிலையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ஒரு நாடு மட்டும் தங்கத்தை சாக்கடையில் கொட்டுகிறதாம்.
சுவிட்சர்லாந்து நாட்டின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 43 கிலோ தங்கம் மற்றும் 3,000 கிலோ வெள்ளி அடித்துச் செல்லப்படுவதாக சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்வாடிக் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தங்கம் மற்றும் வெள்ளியின் சந்தை மதிப்பு மட்டும் ஆண்டிற்குச் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
சுவிஸ் ஃபெடரல் சுற்றுச்சூழல் அலுவலகத்தின் கோரிக்கையின்படி, ஆய்வாளர்கள் நாடு முழுவதும் உள்ள 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவப் பயன்பாட்டில் உள்ள அபூர்வ கனிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.




