Vimarsagan Media

Home » India » தமிழ் சினிமாவின் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா காலமானார்.

தமிழ் சினிமாவின் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா காலமானார்.

தமிழ் சினிமாவின் “இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் பாரதிராஜா.

Scroll to Top