Vimarsagan Media

Home » India » இயக்குனர் பாரதி ராஜா காலமான நிலையில், இவரது சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாரதி ராஜா காலமான நிலையில், இவரது சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாஇயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் நேற்றைய தினம் காலமானார். இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

கிராமத்து கதையை மையமாக கொண்டு பல திரைப்படங்களை இயக்கியதுடன், பல கதாநாயகிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனை யுடன் பொதுமக்களின் வீதிக்கு கொண்டு வந்தவர் ஆவார்.

சிறந்த நடிகராகவும் திகழும் இவர், சமீப காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மகன் கடந்த ஆண்டு உயிரிழந்த பின்பு மனம்வாடிப் போனவர் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனது வீட்டில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். ஊடக தகவலின்படி கடந்த 2025 ஜுலை நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு ரூ.85 கோடிக்கு மேல் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மதிப்பீடு செய்ய முடியாத ஆயிரக்கணக்கான படைப்புகளை திரையுலகிற்கு விட்டுச் சென்றுள்ளது மிகப்பெரிய செல்வம் ஆகும். இயக்குனர் பாரதிராஜாவின் மிகப்பெரிய பலம் என்று கூறினால் புதிய திறமைகளைக் கண்டறிவதுதான். ஆம் கே.பாக்யராஜ், ராதிகா, ரேவதி என சினிமாவில் ஜாம்பவன்களாக திகழும் பலரையும் அறிமுகம் செய்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது, 6 தேசிய விருது மற்றும் மாநில அரசு விருது என இவைகளை வென்று, தமிழ் சினிமாவின் பெருமை யை உலகளவில் கொண்டு சேர்த்தவர் ஆவார்.

இவருக்கு மைல் கற்களாக கருதப்படும் படங்கள், முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா ஆகிய படங்கள் ஆகும்.

Scroll to Top