ரெம்பா இன்னும் கையால் இடிக்கப்பட்டு, சமையல் குறிப்புகள் குடும்பப் பாரம்பரியச் சொத்துக்களைப் போலப் பாதுகாக்கப்படும் சமையலறைகளில், பினாங்கு அதன் மிகவும் அறியப்பட்ட பாதுகாவலர்களில் ஒருவரை இழந்துள்ளது.
புகழ்பெற்ற பாரம்பரிய (nyonya) சமையல் கல்வியாளர், உணவுத் தூதர் மற்றும் எழுத்தாளரான பேர்லி கீ, புற்றுநோயுடன் போராடி தனது 69வது வயதில் காலமானார் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது மரணத்தை அவரது மருமகன் ஜீவன் ராம்சாமி உறுதிப்படுத்தினார். அவர் முகநூலில் இந்தச் செய்தியை அறிவித்து, அவரது மறைவால் குடும்பத்தினர் அடைந்த துயரத்தையும் விவரித்தார். “புற்றுநோயுடன் துணிச்சலுடன் போராடிய எனது அன்பு மாமியார் காலமான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கீ, பாரம்பரிய சமையலின் பாதுகாவலராகவும், பினாங்கின் பெரனக்கான் சமையல் பாரம்பரியத் தைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய நபராகவும் பரவலாக அறியப்பட்டார்.
ஐந்தாம் தலைமுறை பினாங்கு நோஞ்ஞாவான இவர், ஒரு பாரம்பரிய சமையலறையில் தனது அத்தை களிடமிருந்து மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட குடும்ப சமையல் குறிப்புகளைக் கற்று வளர்ந்தார். அந்த அறிவை, பிற்காலத்தில் கற்பித்தல் மற்றும் பாதுகாத்தல் எனும் தனது வாழ்நாள் பணியாக மாற்றிக்கொண்டார்.
அந்தப் பணியே இறுதியில் பினாங்கு வீட்டுச் சமையல் பள்ளியாக உருவெடுத் தது. அங்கு அவர் அனைத்துலக மாணவர்களை செய்முறை வகுப்பு களுக்கு வரவேற்றார். அந்த வகுப்புகள் பெரும்பாலும் சமையலறையிலிருந்து வெகு தொலைவில், அதாவது பினாங்கின் ஈரச் சந்தைகளில் தொடங்கின. அங்கே மூலப்பொருட்கள், கதைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை ஒன்றிணைந்தன.
மேலும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட குடும்ப சமையல் குறிப்பு களையும் சமையல் மரபுகளையும் ஆவணப்படுத்தும் ‘எ நோஞ்ஞா இன்ஹெரிட்டன்ஸ்’ என்ற சமையல் புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.




