நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.00 வரை பிரிக்பீல்ட்ஸ் (மகாராஜா அருகில்) முதல் மாடியில் தமிழ்நேசன் பணியாளர்கள் ஒன்று கூடும் நிகழ்வு வெகு நேர்த்தியாய் கு.சா ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
50க்கும் மேற்பட்ட தமிழ்நேசன் உறவுகள் கலந்து சிறப்பித்தனர் .கோலாலம்பூர் மாநகர் சபையின் சுகாதாரப் பிரிவின் முன்னாள் தலைமை இயக்குநரும் மலேசிய தமிழ் வாசகர் பேரவையின் தலைமை இயக்குநருமான மு .புஷ்பா கரன் தமிழ் நாளிதழ் வாங்கி வாசிக்கவும் அதன் நேசமாக தாய்மொழி உயிர்த்தெழ உறுதுணை புரியவும் என தனது சிறு ஆதங்கத்தை நியாயமாக வெளிப்படுத்தினார். பேரா தமிழ்ப்பள்ளி முன்னாள் அமைப்பாளர் பரதனும் கலந்து வாழ்த்துரை வழங்கினர். பாபாஸ் சிவா கவிதை வாசித்தார்
தமிழ்நேசன் முன்னாள் பணியாளரும் தொழிலதிபருமான கே சுப்பிரமணியம் அனைத்து விருந்தோம்பலுக்கும் உரிய உபயக்காரர். அவரது தலைமை உரையோடு இனிய விருந்தும் ஆரம்பமானது. சில நினைவுகள் மனதோடு மெய்ப்படவும் சில அசைவுகள் அமானுஷ்யமாய் பொய்ப்படவும் மனசை எட்டிப் பார்த்து வருடி விட்டுத் தான் சென்றன. இருப்பினும் பழையன கழி என்பது போல் புது வெள்ளமாய் மகிழ்ச்சி நிரம்பவே செய்தன.




