பிரபல பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி மற்றும் மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரியா செல்வராஜ், தனது 52-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்து சாதனை புரிந்துள்ளார்.
இமாலயச் சவால்கள் நிறைந்த இந்த மலையேற்றச் சாதனைப் பயணம் குறித்த விவரங்கள்:சாதனைப் பின்னணி: முப்பது நாட்களில் முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டிருந்த எவரெஸ்ட் பயணம், வானிலை மாற்றங்கள் மற்றும் மோசமான சூழல் காரணமாக 45 நாட்களாக அவரின் சாதனை நீடித்தது.
இவரது முந்தைய சாதனைகள்: எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு முன்பாக, 2023-ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்திலும், பின்னர் நேபாளத்தில் உள்ள மனஸ்லூ சிகரத்திலும் மலையேற்றம் செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.
முறையாக மலையேற்றப் பயிற்சி வகுப்புகளை முடித்த இவர், தனது உடற்தகுதியை மேம்படுத்த சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் படிகள் மற்றும் மேம்பாலங்களில் பளுவைத் தூக்கிக்கொண்டு ஏறும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.




