ஹோ சி மின் நகரம்: விலங்குகளைத் திருடுவதில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பலை அதிகாரிகள் முறியடித்ததைத் தொடர்ந்து, இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படவிருந்ததாக நம்பப்படும் 400-க்கும் மேற்பட்ட பூனைகள் வியட்நாமில் மீட்கப்பட்டுள்ளன என்று ஒரு விலங்குகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
பூனைகளைத் தீவிரமாகத் திருடி சேகரித்து வருவதாக நம்பப்படும் ஒரு குற்றக் குழுவின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஒன்பது பேர் தடுத்து வைக்கப்பட்டு ள்ளனர் என்று ஹோ சி மின் நகரத்தின் அதிகாரப்பூர்வ காவல்துறை செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
கடந்த வாரம் டேய் நின் மற்றும் ஹோ சி மின் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனை களில், 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகளையும், பனிக்கட்டியில் பதப்படுத்தப்பட்ட சுமார் 80 பூனைகளின் சடலங்களையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
கூடுதலாக, மற்றொரு வளாகத்திலி ருந்து மேலும் 21 பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியட்நாமிய சட்டத்தின் கீழ் நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்ணும் பழக்கம் சட்டப்பூர்வமானது, ஆனால் வர்த்தகர்கள் அந்த விலங்குகளின் பூர்வீகத்தை நிரூபிக்க ஒரு சிறப்பு அனுமதி வைத்திருக்க வேண்டும்.




