எதிர்வரும் 21 ஜூன் 2026 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2057 ஆனி் 7ம் நாள்) மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 48 வது திருமுறை ஓதும் விழா எம்பெருமானின் ஆசியுடன் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது என கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர் & மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் தலைவர் விவேகரத்னா அருள்நேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.
காலை மணி 8.30க்கு திருமுறை ஓதுதல் , வர்ணம் தீட்டுதல் , சமய கேள்வி பதில், பொங்கல் பானையை அழகு படுத்துதல் போன்ற போட்டிகளும் மற்றும் மதியம் 2 மணிக்கு மேல் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.இந்நிகழ்விற்கு சுற்று வட்டாரத்தைச்சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர் என ஏற்பாட்டுக் குழு தலைவர் தொண்டர்மணி மோகன கிருஷ்ணன் மாரி கூறினார்.
ஆகவே சுற்று வட்டார மக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.




