இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறவிருந்த ஆட்சியாளர்கள் மாநாடு ஒத்திவைத்துள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சி குறித்த சர்ச்சை தீவிரமடைந்துவரும் நிலையில், மாநாடு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல்தேதி திட்டமிடப்பட்டிருந்த மாநிலத் தேர்தல்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
மாமன்னர்கள் மாநாடு ரத்துச் செய்யப் பட்டதைச் செவ்வாய்க்கிழமை காலையில் தேசிய அரண்மனையின் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். இருப்பினும், அதற்கான காரணம் எதுவும் வெளியிடப் படவில்லை.
நெகிரி செம்பிலான் அரியணைக்கு இருவர் உரிமை கோருகின்றனர். இந்நிலையில், இந்த மாநாட்டைத் தொடர்வது முறையானதுதானா என்பது குறித்த அக்கறைகள் எழுந்ததாக மாநில முதலமைச்சர் உட்பட சிலர் தெரிவித் தனர்.
மலேசியாவில், மாமன்னர்கள் மாநாடு ரத்துச் செய்யப்படுவது அரிதான ஒன்று. இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டில் கோவிட்-19 முடக்கநிலையின்போதுதான், அத்தகைய மாநாடு ரத்துச் செய்யப் பட்டது.




