சிலாங்கூரில் உள்ள ‘தேவைக்கேற்ற போக்குவரத்து’ (DRT) சேவைக்கான மாதந்தோறும் வழங்கப்படும் RM30 மானியம், தங்களின் நிதிச் சுமையைக் குறைத்துள்ளதாக வழக்கமான பயனர்கள், குறிப்பாக மாணவர்கள் கூறுகின்றனர்.
ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட ‘சிலாங்கூர் மீள்திறன் வலுவூட்டல் தொகுப்பு’ (PPDTS)-இன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மலாயா பல்கலைக்கழகத்தில் (UM) இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பயின்று வரும் லீ ஜுன் சியான் (Lee Jun Xian), ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் இந்த மானியம், முன்பு RM100-ஆக இருந்த தனது மாதப் போக்குவரத்துச் செலவைக் குறைத்துள்ளதாகக் கூறினார்.
“நான் வாரத்திற்கு சுமார் 10 முறையோ அல்லது அதற்கு மேலோ DRT சேவை யைப் பயன்படுத்துகிறேன்; முக்கியமாக வீட்டிலிருந்து LRT நிலையங்களுக்குச் செல்லவோ அல்லது பல்கலைக்கழக வகுப்புகளுக்குச் செல்லவோ இதைப் பயன்படுத்துகிறேன்.
“RapidKL நிறுவனம் தனது ‘My50’ வரம் பற்ற பயணச் சீட்டுத் திட்டத்திலிருந்து DRT சேவையை நீக்கியபோது எனது போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தன என்றார்




