Vimarsagan Media

Home » Malaysia » வரும் ஜூலை 1 முதல் சிங்கப்பூருக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையிலான தனது சேவை ஒன்றை ஏர் ஆசியா நிறுத்தம்

வரும் ஜூலை 1 முதல் சிங்கப்பூருக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையிலான தனது சேவை ஒன்றை ஏர் ஆசியா நிறுத்தம்

ஏர் ஆசியா நிறுவனம், வரும் ஜூலை 1 முதல் சிங்கப்பூருக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையிலான தனது இடைநில்லாச் சேவை ஒன்றை நிறுத்தவுள்ளது.

இந்த வழித்தடத்திலான தனது நேரடி விமானச் சேவையை நிறுத்தவுள்ளது.

ஸ்கூட், சிட்டிலிங்க் (Citilink) போன்ற குறைந்த கட்டணப் போட்டி நிறுவனங்கள் உட்பட மற்ற ஏழு விமான நிறுவனங்கள் தொடர்ந்து நேரடி விமானச் சேவை வழங்குகின்றன.

அதே வேளையில், இந்தோனீசியா ஏர்ஏ‌ஷியாவின் பயணிகள் ஜூலை முதல் கோலாலம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவார்கள்.

சிங்கப்பூரிலிருந்து ஜகார்த்தாவிற்குத் தினமும் ஒரே ஒரு விமானத்தை மட்டும் இயக்கும் இந்தோனீசிய ஏர்ஏ‌ஷியா, இந்தக் குறைந்த கட்டண விமான நிறுவனத்தின் இந்தோனீசிய துணை நிறுவனமாக உள்ளது.

இதன் விளைவாக, பொதுவாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான ஒரு பயணம், கோலாலம்பூரில் காத்திருக்கும் நேரத்தைப் பொறுத்து 10 மணிநேரத் திற்கும் மேலாக நீட்டிக்கப்படலாம்.

Scroll to Top