கடந்த வியாழக்கிழமை நால்வரின் உடல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் எஞ்சிய எட்டுப் பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
‘கத்தார் எனர்ஜி எல்என்ஜி’ நிறுவனத் தால் இயக்கப்படும் ராஸ் லஃபான் தொழில்துறை நகரில் உள்ள ‘பர்சான்’ உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில் அந்த வெடிப்பு ஏற்பட்டது. அதில் இந்தியர்கள் 12 பேர், பாகிஸ்தானியர் ஒருவர் என 13 பேர் உயிரிழந்தனர்.
உடல்களை விரைவாகத் தாயகம் அனுப்புவதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவிய கத்தார் அதிகாரிகள், இந்தியச் சமூக அமைப்புகள், இந்திய அரசு முகமைகளுக்குத் தூதரகம் நன்றி தெரிவித்துக்கொண்டது.
இதற்கிடையே, கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுலும் தூதரக அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை அல் கோர் பகுதிக்குச் சென்று, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.




